மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும், புத்தூர் மேற்கு சிவன் கோவிலடியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சாம்பமூத்தி அவர்களின் நன்றி நவிலல்.
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்
அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில்
நனைத்துக்கொண்டே இருக்கும்
நாட்கள் 31 ஓடி மறைந்தாலும்
என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....!!!!
எனது தந்தையின் இழப்பு செய்து கேட்டு எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அனைவரும் அளித்த அனுதாபத்திற்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் எங்கள் இதயப்பூர்வமான நன்றியை முழுமையாக வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது. நீங்கள் எங்களை உங்கள் எண்ணங்களில் வைத்திருந்தாலும், சமூக ஊடகங்கள், தொலைபேசி அழைப்பு,மற்றும் குறுஞ்செய்தி,நேரிலும் எங்களுக்கு அன்பையும் ஆதரவையும் அனுப்பியிருந்தாலும் அல்லது எந்த வகையிலும் எங்களுக்கு உதவியிருந்தாலும், உங்கள் அன்பும், கருணையும் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதலையும், அளவில்லாவிருப்பத்தையும் அளித்துள்ளது என்பதை அன்புடன் அறிந்துகொள்ளுங்கள். எப்போதும் எங்கள் நினைவில் இருக்கும்.
இந்த இறுதிச் சடங்கு மற்றும் அனைத்து கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பெரும்பாலானவற்றை ஒழுங்கமைக்க எங்கள் வீட்டில் நீங்கள் செலவிட்ட எண்ணற்ற நேரத்தை, எனதுஉறவுகள், மற்றும் எனது மனைவியின் நெருங்கிய குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பநண்பர்கள்மற்றும் ஊர் மக்களுக்கும், அனைவருக்கும் நான் மிகவும் சிறப்பு வாய்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துரதிர்ஷ்டவசமான நேரத்தில் என்னையும், குடும்பத்தையும் ஆதரித்த எனது அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
I am thankful to have shared memories with you at Union College Tellippalai. I will miss all of them truly and your impact on our family.