
அமரர் கந்தையா ரட்ணகுமார்
Retired Consultant Orthopaedic Surgeon Barking Havering Redbridge NHS Trust
வயது 69
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர் ரத்தினகுமார் உடல் நலம் குன்றி அவசர சிகிச்சை பெற்ற வேளையில் அவர் குணமடைவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம்
மரணத்தின் வாசலில் இருந்தும் மானிடர் இன்று திரும்பி வருகிறார்கள். வருவார் குணமடைவார் என்று ஏங்கி ஈசனை கேட்டொம். ஒரு தென்பும் இறை நம்பிக்கையும் இருந்தது. ஆனால் மறை பொருள் நோக்கம் பிறிதொன்றாகி விட்டது! அதே ஈசன் அன்னாரை தான் அழைத்து விட்டான். இதன் அர்த்தம் தான் எதுவோ? புரியவில்லை புதிராகத்தான் இருக்கிறது.
அங்கும் இங்கும் அலை போல தினம் ஆடிடும் மானிட வாழ்விலே எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார் என்கின்ற கூற்று நினைவில் தோன்றுகின்றது
அன்னாரை நாம் நேரில் இனி சந்திக்கவிட்டாலும், அவருடன் சம்பாஷிக்கவிடாலும், அவருடன் பேசிக்கலந்து உரையாடிய இங்கிதமான நினைவுகள் மேலும் பழகிய அனுபவங்கள் என்றென்றைக்கும் நம்மிடையே நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையுடன்,
துணைவி சரோ மற்றும் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளும் அரியா, ஜஸிந்தா , திமொத்தி, ரேச்சல் ஆகியோர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையவதாக!
Write Tribute
I met Mr Ratnakumar, Ratna, when due to illness my orthopaedic surgeon was unable to carry out what I imagined would be my final 2 knee revision/replacements. I was honoured and grateful when Ratna...