யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்டிருந்த கந்தையா இராசலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!!!
அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
ஓர் வருடமாகியும், அனல் கக்கி எரியுதையா உங்கள் நினைவுகள்!
அன்பின் அடையாளமே, அரவணைப்பின் உதாரணமே!
பண்பின் திருவுருவே, பாசத்தின் இலக்கணமே!
நேசத்தின் பிறப்பிடமே, நிறைந்திட்ட குலவிளக்கே!
வீசும் காற்றினிலும், நாம் விடும் மூச்சினிலும்,
எட்டு திக்குகளிலும் உங்கள் நினைவுகளால் வாடுகின்றோம் அப்பா!
வானத்தை விட்டு நிலவையும், வாசத்தை விட்டு மலரையும்,
பிரிக்க முடியாது போன்று, உங்கள் நினைவுகளையும்,
எங்கள் நெஞ்சை விட்டு என்றும் அகற்றமுடியாது அப்பா!!
உங்கள் நினைவுகளை சுமந்து நிற்க்கும் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!