
யாழ். மண்டைத்தீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பத்மநாதன் அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிரங்கநாதன், பிரபாகரன், திருநற்செல்வி, சுதாகரன், கருணாகரன், அருட்செல்வி, கலைச்செல்வி, மயூரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகநாதன்(கனடா), கதிர்காமநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாலட்சுமி, சிவமணி, சுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தரூபி, யோகேஸ்வரி, சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்வேதா, வருண், கதிர்ஷன், சுகீரன், விஷால், சகானியா, சரூண், கஜீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சநாதன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் RIP