யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் திருக்கேதீஸ்வரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கெந்தீஸ்வரன் அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், குணரெத்தினம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
இராஜலோகன்(கனடா), பிருந்தா(கொழும்பு), இந்துப்பிரியதர்சினி(தபாலகம்- மன்னார்), நிஷாந்தன்(கனடா), வினோதன்(கனடா), சுஜீவன்(கனடா), பிரதாபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரிதா(கனடா), சுதர்ஷன்(கொழும்பு), குருபரன்(அதிபர் -மன்/கெளரியம்பாள் அ.த.க. பாடசாலை, திருக்கேதீஸ்வரம்), நிலக்ஷி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விகாஷ், பிரஷ்ரிகா, மித்ஷஜன், கன்ஷிகா, பிருத்வின், பிரணவ், அர்ஷன், பிரதீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவா - நந்தினி(கனடா), விக்னேஸ்வரன் - சுஜாத்தா(சுவிஸ்), கலைச்செல்வி - மகேஸ்வரன்(கனடா), சண்முகலிங்கம் - விஜிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கமலாம்பிகை(கனடா), கனகாம்பிகை(கனடா), அருளானந்தம்(இலங்கை), மகேஸ்வரன்(கனடா), கலைவதனி(இலங்கை), மகிழினி(சுவிஸ்), மைதீபன்(இலங்கை), மலர்விழி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணி முதல் 04:00 மணி வரை மன்னார் உப்புக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருக்கேதீஸ்வரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.