1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா கணபதிப்பிள்ளை
முன்னாள் பரந்தன் கெமிக்கல் உத்தியோகத்தர்
வயது 86
Tribute
31
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
.யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்
நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்- எங்கள்
ஈர விழியோடு
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
ஓர் ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!
உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை
பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்