மட்டக்களப்பு நொச்சிமுனையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஜெயபாலன் அவர்கள் 05-08-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ருத்ராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிருபன் அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜெயமதி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புவிராஜசிங்கம், தனபாலன் மற்றும் கமலாதேவி, யோகேஸ்வரன், கருணாதேவி, சுசிலாதேவி, பத்மினி, குணாளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கனகலிங்கம், துரைராஜசிங்கம் மற்றும் சிவலிங்கம், சோதிராஜா, பத்மநாதன், ராஜகுலேந்திரன், மகேந்திரன், மாலினிதேவி, ஜெயந்திரன், லோகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சற்குணம், கலாராணி ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும்,
ஜனுஷ், திசா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குயிலுக்கேது குருநாதர்???
தவத்தாய் பாக்கியம் அவர் பெற்றெடுத்த மழலை
அவன் இசையில் லயித்தே தொட்டில் அசைத்து பரவசம்
கொடுத்தான் அன்னை அவர்க்கு!
அவன் இசையோடு கொண்ட காதல்
மழையோடு மண் கொண்ட வாசமாய் தாய்
மட்டு மண்ணில் ஈரமாய் இன்றும்..
குயிலுக்கேது குருநாதர்? கலைத்தாயின் ஜெயபாலன்
அவன் மூச்சுக்காற்றில் தளிர்த்து வேங்குழல்- அன்று!!
அவன் சுவாசம் இன்றி மூர்ச்சையாகி போனதுவோ- இன்று!!
இசையால் தொடர்ந்த உங்கள் பயணம்
விண்ணோக்கி போனாலும் எமை
இசைச்சாரலாய் இனியும் ஆளட்டும் எந்நாளும்!
உங்கள் ஆத்மா
இசையோடு சங்கமிக்க
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
“Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.” ― Plato I remember all of the lessons you taught me Jeyam Master. Every lesson you had...