
யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்லையா அவர்கள் 22-05-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரவப்பிள்ளை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பொன்னம்மா, பொன்னுத்துரை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாரதாதேவி, காலஞ்சென்ற அன்பழகன் மற்றும் சகுந்தலாதேவி, சரசாதேவி, கலையழகன், அருளழகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபேசன், தமிழ்வளர்செல்வி, தேவராஜா, ஞானச்சந்திரன், அமுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சலிகா, நிரோஷன் மஜந்தா, மஞ்சுதன், மாருசன், சுகன்யா, சாருஜா, நிஷானுஜா, கிருஷானா, டிசானி, ராலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பிறீணிஸ் நயினிகா, நிகில், யுவினா, சைரஸ், ஏசா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் நாச்சிமார் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல.1010/12B, கே.கே.எஸ் வீதி,
நாச்சிமார் கோவிலடி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94770470182
- Phone : +94212225554
- Mobile : +18455072689
- Mobile : +18456648270
- Mobile : +19053010706
- Mobile : +94761012167