10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா பாலசிங்கம்
(காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மேற்பார்வையாளர்)
வயது 73
அமரர் கந்தையா பாலசிங்கம்
1940 -
2014
சுழிபுரம் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சங்கானையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-07-2024
விழிநீரை துடைக்க விரல் ஒன்று இருந்தது அன்று
பத்து ஆண்டுகள் கழிந்தது இன்று
இதயம் கருகி இமைகள் நனைகிறது
உங்கள் பிரிவினிலே...
எத்தனை உறவுகள் இருந்தாலும்
தோள்சாய அப்பா இல்லையே!
என கதறியழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்க விட்டுவழி
தெரியாத் தூரம் விரைந்தோடி சென்றதேனோ!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
நீங்கள் எமக்கு வழிகாட்டியாய் எங்கள்
இதயத்திலேயே வாழ்கிறீர்கள் அப்பா!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute