31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 16 MAR 1937
ஆண்டவன் அடியில் 15 JUL 2022
திரு கந்தையா பாலசிங்கம்
ஓய்வுபெற்ற மருந்தாளர் – மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வடமராட்சி
வயது 85
திரு கந்தையா பாலசிங்கம் 1937 - 2022 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கரவெட்டி மேற்கு கரணவாயைப் பிறப்பிடமாகவும், இமையாணன் மேற்கு உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர் வரும் 13-08-2022 சனிக்கிழமை அன்று காலை 05:00 மணியளவில் கீரிமலையிலும் வீட்டுக் கிரியைகள் மு.ப 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் இடம் பெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் குடும்ப சமேதராக வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் பங்கேற்பதோடு அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.