5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா அன்னலிங்கம்
ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் - கச்சேரி, திருகோணமலை, முன்னாள் பொருளாளர் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்
இறப்பு
- 06 JUN 2017
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடிச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா அன்னலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு ஐந்து போனாலும்
உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை அப்பாவே!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உங்கள்
நினைவால் வாடுகிறோம் அப்பாவே!
உங்கள் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எங்கள் அன்பு அப்பாவே!
உங்கள் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள் யயாகரன், யயாழினி, யயந்தினி,
மற்றும் மருமக்கள் பேரப்பிள்ளைகள்
தகவல்:
பிள்ளைகள்