யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா லோகநாதன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பா!!
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம்
பாசமாய் எங்களை வளர்த்த
பாசத்தி்ன் பிறப்பிடமே
பார்க்குமிடமெல்லாம் எங்கள்
பார்வையுள் தெரிகின்றீர்கள்!
இருபது ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
கரைந்து கரைந்து
மணங் கமழும் சந்தனமாய்
உருகி உருகி ஒளி வழங்கும்
மெழுகு வர்த்தியாய்
உயர உயர ஏறிடவே
உயர்த்தி வைக்கும் ஏணியதாய்
சுமை சுமந்து நின்றாலும்
பழுவறியா சுமைதாங்கியாய்
வளமான வாழ்விற்கு
வழிகாட்டி வைத்தவரே
நீங்கள் சென்றது எங்கென்று
சொல்லாமல் ஏன் சென்றீர்கள்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் மனைவி(இந்திரலீலா), பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Despite the loss of the physical presence, we know that God has assigned this soul to watch over you throughout your life. We feel for your loss, our most sincere condolences.