
யாழ். வயாவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு வைத்தியசாலை வீதியை வதிவிடமாகவும் கொண்ட கந்தலிங்கம் அன்னம்மா அவர்கள் 20-06-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னுமணி தம்பதிகளின் இளைய மகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் கந்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகரத்தினம், சர்வலோகநாயகி, குமுதினி, காலஞ்சென்ற கணேசன், நந்தினி, குகனேசன், காலஞ்சென்ற சிவனேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ரத்தினம், துரைஐயா மற்றும் நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாகரன், விஜயகுமார், குகராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோதீஸ்வரி(சோதி), குமுதினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தினேசன், விந்தியா, திலக்சன், கிணோஜா, யதுர்சிகா, டிலக்சி, டிலானி, சிந்துஜா, காலஞ்சென்ற ராகுலன், ராகவன், சரண்யா, கிஷோக், நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஹன்சிகா அவரிகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.