
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி இராசமணி அவர்கள் 19-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, குனேஸ்வரி, ராதாகிருஷ்ணன், காலஞ்சென்ற பாலச்சந்திரன், தர்மயோகேஸ்வரி, கைலைநாதன், சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற செல்வரட்னம், சிறிஸ்கந்தராஜா, சிவபாதசுந்தரம், சுரேஸ்குமார், சிவசக்தி, ஜெயகாந்தி, பகவத்கீதா, கிருபலோசினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
கல்லூரிவீதி - 77,
நீராவியடி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details