யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நிரஞ்சன் அவர்கள் 02-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், புளியங்கூடலைச் சேர்ந்த கந்தசாமி செல்வநாயகி(ஓய்வுபெற்ற அதிபர்கள்) தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
கலைச்செல்வி(ஆசிரிய ஆலோசகர் வலயக் கல்வி அலுவலகம்- கிளிநொச்சி), காலஞ்சென்ற நிமலன்(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வ. மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சங்கர்(சங்கர் ஸ்ரூடியோ- கிளிநொச்சி), கவிதா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- சுகாதார திணைக்களம், சம்மாந்துரை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருத்திகன், ஜக்சியா, நிஷசன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
ஆருதி அவர்களின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான வடிவேலு, சொர்ணகாந்தி, ரகுபதி(ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா வடக்கு), கமலாதேவி, காலஞ்சென்றவர்களான தவராசா, தர்மராசா, தயாபரன் ஆகியோரின் பாசமிகு பெறா மகனும்,
காலஞ்சென்ற தர்மராசா(கனடா), சண்முகராசா(கனடா), இராஜேஸ்வரி(கனடா), நிர்மலா(கனடா), காலஞ்சென்ற லோகேஸ்வரி(நர்மதா நகையகம்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வேலணை மத்திய கல்லூரிகால என் நண்பன் கண்ணையா மாஸ்ரர் குடும்பத்தின் அதிர்ச்சியூட்டும் இழப்பு, பெரும் கவலையை அளிக்கிறது. இவ்விழப்பைத்தாங்கும் இதயவலு அவர்களிடம் குன்றாதிருக்க எம் படைப்பாளியை...