யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெருமை மிகுந்த பேரழகா!
ஆண்டோ ஐந்திங் கானதையா
அன்புத் தெய்வம் தாமெங்கே!
மீண்டும் மீண்டும் கண்ணீரில்
மிதந்தோம் பாரீர் நாமிங்கே!
வேண்டும் வரத்தை அளிப்பவனே
வேடிக் கையைக் காட்டுகையில்
யாண்டும் தொடரும் இடும்பையிதை
யாரும் தீர்க்க இயலாதே!
தன்னைத் தந்து காத்தவரே!
தரணி போற்ற மகிழ்ந்தவரே!
பொன்னை நிகர்த்த எங்களையா!
போன விடந்தான் எத்திசையோ?!
தென்னை பனையும் வாழைகளும்
தேம்பி அழுதே! இந்நேரம்!
அன்னை தந்தை தாமெங்கே?
ஆறாத் துயரில் நாமிங்கே!
எங்கு சென்றப் போதிலுமே
எவரும் உயிரென் றுரைக்கின்ற
தங்க மனத்தை நாமிழந்தோம்!
தவித்தோம் தங்கள் பிரிவாலே!
இங்கோர் கனவு நிறைவேறும்
எங்கள் பெற்றோர் பெயர்கூறும்!
அங்கே அந்தத் திருநாளில்
அடைவீ ரின்பம் பேரின்பம்!
பாடித் திரிந்தீர் தம்பாடல்
பாரில் விளைந்த நன்முத்து!
வாடிக் கிடக்கும் பயிருக்கும்
வாட்டம் தீர்க்கும் பெருஞ்சொத்து!
நாடித் துடிப்பும் தமதன்றோ
நாளைப் பொழுதில் இங்கெங்கும்
கூடிக் கதைப்பார் கந்தசாமி
கமலாம் பிகையின் வரலாறே!
ஆறாத் துயரில்
கந்தசாமி கமலம்பிகை குடும்பத்தினர்!