10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா திருநாவுக்கரசு
வயது 67
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்.அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு இலக்கணமாய்
பண்புக்கு இருப்பிடமாய்
பாரினில் வாழ்ந்திருந்த- எம்
பாசமிகு தந்தையே!
பார் போற்றும் உத்தமராய் வாழ்ந்து
எம் வாழ்வின் உயர்வுக்காய் உழைத்தோரே......
பத்து வருடங்கள் ஆனதய்யா
ஆனாலும் ஆறவில்லை எம்மனது
காலன் கையில் போயிருந்தாலும்
காலமெல்லாம் எங்களுடன் வாழ்கின்றீர்கள்
உங்கள் மறைவை
எண்ணியேங்கி
இதயம்
வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்றுவரை எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்
காலம் உள்ளவரை
எம்முடனே
வாழ்ந்திருப்பீர்- எம்
நினைவுத் தெய்வமாய்!!!!!
தகவல்:
குடும்பத்தினர்
miss you thatha