Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 FEB 1939
இறப்பு 20 SEP 2019
அமரர் கந்தையா நாகேஸ்வரி
வயது 80
அமரர் கந்தையா நாகேஸ்வரி 1939 - 2019 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை தையிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகேஸ்வரி அவர்கள் 20-09-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற வைரவி கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

பாலச்சந்திரன்(பிரான்ஸ்), சரோஜாதேவி, ரவிச்சந்திரன்(பிரதம தபாலகம்- யாழ்ப்பாணம்), விமலச்சந்திரன்(பிரான்ஸ்), ஜெயபாலசிங்கம், சுபத்திராதேவி, ஞானச்சந்திரன்(மாவட்ட நீதிமன்றம்- முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களா கந்தையா, சுப்பிரமணியம், அப்புத்துரை, மகேஸ்வரன், பரமேஸ்வரி மற்றும் இரத்தினேஸ்வரி, தங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பேபி(ராஜலக்ஸ்மி- பிரான்ஸ்), மகேஸ்வரன், புஸ்ப்பசிறி, உமா(பிரான்ஸ்), ஜெயந்தினி, பாஸ்கரன்(பிரான்ஸ்), சுகந்தினி(கமநல அபிவிருத்தி திணைக்களம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீர்த்தனன்(பிரான்ஸ்), கௌசல்யா(பிரான்ஸ்), கிசோத்தனன்(பிரான்ஸ்), சங்கவி, சோபிகா, சந்தோஷ், நிரஞ்சன், திலக்‌ஷன், கஜந்தன், சாய் அவிநாஸ்(பிரான்ஸ்), சாய் அஜந்த்(பிரான்ஸ்), திசிதா(பிரான்ஸ்), கணாதீபன், சாருஜா(பிரான்ஸ்), ரதுமிதன், கதிர்ஷிகன், ஹரத்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-09-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஆனைக்கோட்டை இல்லத்தில் நடைபெற்று பின்னர் காக்கைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 19 Oct, 2019