10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா குகதாசன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா உங்கள் அழகான உருவத்தை மறப்போமா
அயராத கடின உழைப்பை மறப்போமா,
அன்பான வார்த்தைகளை மறப்போமா,
அகோரமான சீற்றத்தையும் மறப்போமா
எதை நாம் மறப்போம் எப்படி நாம் மறப்போம் அப்பா
உங்களை எம்மால் மறக்கவே முடியாது...
பக்குவமாய் எமை வளர்த்து காத்து
கல்வி அறிவு தனை ஏற்றமுடன் அளித்து
வையத்துள் வளமாய் வாழ்ந்திட வைத்தீர்கள்.
நீங்கள் பண்புடனே வாழ
பக்குவமாய் சொன்ன வார்த்தைகள்
என்றும் எம் மனங்களில் வாழுதையா!!!
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
நீங்கள் மறைந்து பத்தாண்டுகள் ஆனாலும்
இன்றும் என்றும் எம் நெஞ்சத்தில்
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்குமையா!!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute