Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 15 APR 1935
மறைவு 08 JUL 2021
அமரர் கந்தையா கனகரெத்தினம்
வயது 86
அமரர் கந்தையா கனகரெத்தினம் 1935 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:12/07/2026

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கனகரெத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஐந்து ஆண்டுகள்
முடிந்தாலும்  உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது ஐயா!

வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம் நினைவால்
வாடுகிறோம் ஐயா!

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது ஐயா

உங்கள் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம் ஐயா

பேரப்பிள்ளைகளே, நீங்கள் எங்கள் வாழ்வின் வசந்தங்கள்,
பூட்டப்பிள்ளைகளே, நீங்கள் எங்கள் குடும்பத்தின் புதிய விடியல்கள்.

நான் விதைத்த அன்பின் விதைகள்,
இன்று உங்கள் உருவத்தில் மரமாக வளர்ந்திருக்கிறது.

என் வாழ்க்கை புத்தகத்தின் கடைசி பக்கங்களிலும்,
உங்கள் பெயர்களே இனிய கவிதையாக எழுதப்பட்டுள்ளன.

நாளை நான் இல்லாதிருந்தாலும்,
எங்கள் ஆசீர்வாதம் உங்கள் நிழலாகத் தொடரும்.

பேரப்பிள்ளைகளின் பாசத்தில் நான் வாழ்கிறேன்,
 பூட்டப்பிள்ளைகளின் சிரிப்பில் நான் மீண்டும் பிறக்கிறேன்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்.