
யாழ். நீர்வேலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தேவராசா அவர்கள் 06-05-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணபூசணம் அவர்களின் அன்புக் கணவரும்,
உருத்திரேஸ்வரி(கனடா), உருத்திரேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேலு, இராசம்மா, மார்க்கண்டு மற்றும் பரம்சோதி, இராசாங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பூரணானந்தசிவம், சிவபாக்கியம், காலஞ்சென்ற பூபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலச்சந்திரன்(கனடா), அபிராமி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதர்சன், சிந்துஜா, மீரா, சுருதி, ராகவி, நந்தகுமார், ரெறன் ஆகியோரின் அன்புப் பேரனும்.
அஜித், மாயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2021 வியாழக்கிழமை அன்று நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details