யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தவராஜா அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா(மணியம் மாஸ்ரர்), யோகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தம்பித்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், லட்சுமி தம்பதிகள், காலஞ்சென்ற சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி(லண்டன்), கார்த்திகா, மயூரன், சக்திபிரஷாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அகிலன், மயூரன் ஆகியோரின் மாமனாரும்,
கனிஷ்கா, கவினயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பவானி(இலங்கை), சரோஜா(இலங்கை), சிவராஜா(நோர்வே), யோகாராணி(கனடா), சாந்தினி(ஜேர்மனி), திரிலோஜினி(கனடா), ஆனந்தராஜா(நோர்வே), அருளேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு அண்ணாவும்,
கந்தசாமி(இலங்கை), லோகநாதன்(இலங்கை), புஷ்பா(நோர்வே), லோகரட்ணம்(கனடா), குணபாலசிங்கம்(ஜெர்மனி), சூரியகுமார்(கனடா), சுபதா(நோர்வே), சண்முகலிங்கம்(கனடா), காலஞ்சென்ற பரமநாதன், ரகுநாதன்(இலங்கை), குணவதி(கனடா), கேமாவதி(இலங்கை), ரவீந்திரநாதன்(நோர்வே), சந்திராவதி(நோர்வே), சிவநாதன்(கனடா), பத்மாவதி(கனடா), உமாவதி(கனடா), நாதன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 4:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Thavarajah was our backyard neighbor. In my childhood I spoke with him over the fence. He was a white hearted person. I pray God to give him good rest.