10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா தம்பையா
(ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர்- பனாகொட தலைமையகம்)
வயது 84
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம், உக்குளாங்குளம் 2ம் ஒழுங்கை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தம்பையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாண்டுகள் கடந்து விட்டதா
நம்பவே முடியவில்லை அப்பா!
ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள்
நினைவுகள் நீங்காது..!
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
என்றும் மறவாமல் உங்கள்
மனைவி,
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்,
மற்றும் உறவுகள்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute