

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், புலோலி மற்றும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 02-04-2022
புன்னகைத்த முகத்தோடு புதையலென ஞானம்
புதுமையதை தினம்தேடும் பல்நோக்குப் பார்வை
தன்னகத்து வருவோரை தன் அகத்துள் வைத்து
தக்கபடி மொழிபாய்ச்சும் தெய்வீகக் கூர்மை
இன்னலென எய்துபவர் இதயத்துள் சென்று
இருளகற்றி ஒளியேற்றும் தினகரப் போர்வை
மன்னுலகம் உள்ளவரை நின்புகழும் வாழும்
மறைந்தாண்டு போனாலும் மறையாவுன் நேர்மை
எங்களுக்குள் எல்லாமே ஆகி
எமை அவையில் முந்த வைத்து
தங்கப் புருடனாய் தந்தையாய்
தரணி புகழ் ஆசானாய்
ஓங்கு திறனுடை உத்தமரே
ஓராண்டோ நீர் மறைந்து
நீங்கா நினைவோடு நித்தியமாய்
நின் நினைவில் வாழுகின்றோம்.
என்றும் உம் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!