10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
அம்பாறை பாண்டிருப்பு 1ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பார்வதி கணபதிபிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்மூடித்திறக்கும் முன் எம்மை விட்டுப் பிரிந்து
பத்து ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா
பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை
பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல
பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்