Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 13 FEB 1952
இறப்பு 06 NOV 2023
அமரர் கணபதிப்பிள்ளை கந்தசாமி
வயது 71
அமரர் கணபதிப்பிள்ளை கந்தசாமி 1952 - 2023 வரணி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஒரு முறைதான் இப்பிறவி
போனால் வாரது என்று தெரிந்தும்
போகும் வழி எல்லாம் - பாவி
என் மனம் உங்களைத் தேடுகின்றதே!

பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அமரர் கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 06-12-2022 புதன்கிழமை அன்று அதிகாலை 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து சபீண்டிகரண கிரியைகள் மு.ப 10.00 மணியளவில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
வரணி இயற்றாலை,
வரணி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 08 Nov, 2023