யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பரந்தன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை திரிபுரகல்யாணசுந்தரி அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
யோகநாதன்(நாதன்- லண்டன்), சிவானந்தன்(இலங்கை), சிவசக்கி(இலங்கை), ஞானஷ்வரன்(ஞானம்- சுவிஸ்), பாலச்சந்திரன்(சந்திரன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கௌரியாம்பாள்(குஞ்சு- லண்டன்), யோகானந்தன்(யோகன்- இலங்கை), தவமலர்(மாலா - சுவிஸ்), சங்கீதா(கீதா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஷ், பகீரதி, பிரதீபன், டனுஷ், தினேஷ், தவேஷ், நிவேதன், நிருசன், நிசானி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சாமவரதன், திருவரதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் பரந்தனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.