மயிலிட்டி வேல்வீதியை பிறப்பிடமாகவும் நெதர்லாந்து றூர்மோண்ட் ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பொன்னம்மா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-11-2025
ஆண்டுகள் 15 ஆனதம்மா
ஆறிவிடும் எம் துயரம் என
நான் நினைத்தேன்
ஆண்டு 100 ஆனாலும்
ஆறாது என் துயரம்
துணையாய் நீங்கள் இருந்த போது
இன்பங்கள் இரட்டிப்பாகும்
துன்பங்கள் தூர விலகும்
இன்று துன்பமே, எனக்கு
துணையாய் இருப்பாய் என
நான் நினைத்தேன்.
அண்ணா, அக்கா போனபின்னர்
அவர்களுக்குத் துணையாக
உங்களையும் அழைத்துச் சென்றனர்...
அதற்குப் பிறகு நீங்கள்
உங்களுக்குத் துணையாக
இன்னொரு
அக்காவை அழைத்துச் சென்றீர்களே...
மண்ணுலக வாழ்வை விட்டு
விண்ணுலக வாழ்வை வாழ்ந்திட
மிக விரைவாக சென்றீர்களோ
விழிநீர் வடியுதம்மா துடைக்க யாரும் இல்லை...
எம் விழிகளில் என்றும் பாட்டியின் நினைவு
அன்பின் சோலை இன்றும் எம் மனதில்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!