யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், நுவரெலியா, கண்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மகாதேவா அவர்கள் 03-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், அருணாச்சலம், ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
அச்சோ, ஹம்சத்வாணி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
சங்கீதா, ஆதித்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகாதேவி, சுந்தரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மகாதேவன், விவேகானந்தன், யோகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவிகிரிஷா, திவகிரிஷ்ன், ஆதர்ஷ், ஆரபி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
A true friend. I will always miss him