யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை விசாலாட்சி அவர்களின் நன்றி நவிலல்.
நன்றி மலர்கள் சொரிந்தோம்!
எம் தாயவள் எம்மை பிரிந்த நாள் முதல்,
அருவியாய் கொட்டி அழுத கண்ணீரை
நேரிலும், அழைத்தும் தேறுதல் சொன்ன குரல்களுக்கும்
உரிய வேளையில் உணவு தந்து பசிதீர்த்தோருக்கும்
திருவுடல் பார்வைக்கு இருந்தபோது
அங்குவந்து துக்கமதனை பகிர்ந்தோருக்கும்
மலர் வளையம், மாலைகள் தந்து மதிப்பு செய்தோர்க்கும்
கண்ணீர் அஞ்சலிகள் தந்து கெளரவம் செய்தோர்க்கும்
இறுதிநிகழ்வில் இருகரம் தந்து எம்மை தாங்கி நின்றோர்க்கும்
ஈமைக் கிரியைகள் ஆற்றிய சான்றோருக்கும்
மண்டபம் வழங்கிய தாபனத்தார், நிகழ்வுகளை அச்சில் ஏற்றிப்
பணி செய்த அன்பர்கள் என அனைவருக்கும் எமது நெஞ்சம்
நிறைந்த நன்றி மலர்களைத் தூவி வணங்குகின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.