

யாழ். கெருடாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை உமையம்மாள் அவர்கள் 04-03-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேல், வள்ளியம்மை(கெருடாவில்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுவாமிநாதன், சின்னையா(எழுதுமட்டுவாள்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
இராசலட்சுமி(ராணி), காலஞ்சென்ற புஸ்பலர்(மாலா), நாகேஸ்வரி(தேவி), பரமேஸ்வரி(கீதா), சிவசுப்பிரமணியம்(மணியம்), காலஞ்சென்ற சிவபாலன்(பாலன்), இராஜேஸ்வரி(சின்னராணி), சிவனேஸ்வரி(ஈஸ்வரி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சங்கரபிள்ளை, சிவசம்போ(நெடுங்கேணி), கார்த்திகேசு(கெருடாவில்), பொன்னம்பலம்(மீசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுரேஸ், இராசேந்திரம், காலஞ்சென்ற சுப்பிரமணியம், காலஞ்சென்ற செல்வராசா, மாலினி, சின்னராசா, அரியநாயகம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திரகுமார்(லண்டன்), சுதாஜினி(சுவிஸ்), சுகந்தினி(பிரான்ஸ்), உதயசுபா(பிரான்ஸ்), உதயகுமாரி(கனடா), சிவநாதன்(லண்டன்), சுபாஸ்கரன்(வவுனியா), சுதர்சினி(புதுக்குடியிருப்பு), செல்வரஜனி, அனுசியா, காண்டிபன், சியானி, நிரூபன்(பரந்தன்), சிவப்பிரியா(கனடா), சிவசங்கர்(லண்டன்), ஊர்மிளா(நெடுங்கேணி), பொமிலா(முள்ளியவலை), மஞ்சுளா(வவுனியா), அஜித்தா, நிலாஜினி, நிரோஜ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லக்சியா, கவி, கலை, டிவின், அதுசனா, கேதாரன், ஆதி, அபிசா, ஜிந்துசன், சுவாதி, நந்துஜா, நதியா, ஆருசன், ஐஸ்வின், அபினயா, றேனுஜா, அட்சஜா, சுஜித், அஜித், ஆர்த்தீஸ், அனுத்தீஸ், ஆருஷா, மதுனிசா, கஸ்விதா, ரேஸ்மி, தாருயன், வேஸ்சளா, நிதுன், நிவிதா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொரக்கன் கட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace Ammamma. You will be missed. Love you Ammamma