Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 08 APR 1948
மறைவு 16 APR 2019
அமரர் கணபதிப்பிள்ளை தனபாலசுப்ரமணியம்
முன்னாள் Adliswil முருகன் கோவில் தர்மகர்த்தா
வயது 71
அமரர் கணபதிப்பிள்ளை தனபாலசுப்ரமணியம் 1948 - 2019 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம் போக்கத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை தனபாலசுப்ரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!

இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ

பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே!

பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.

உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்