யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை தளையசிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஏழு ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
உங்கள் பிரிவால் வாடும்
காலஞ்சென்ற கலைவாணி(வைத்தியகலாநிதி- இலங்கை),
அருந்ததி(வழக்கறிஞர்- இந்தியா), இந்திராணி(கணக்காளர்- கனடா),
சிவகுமார்(Yoga Studio- South Africa), சந்திரகுமார்(Nettek College),
சூரியகுமார்(லண்டன்), மாலா ரவி(கணக்காளர்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details