

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடியை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் 12-08-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நகுலேஸ்வரன், சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மஞ்சு, சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அன்னலக்சுமி, பாக்கியலீலா, பெரியதம்பி, குணராசா, விஜயராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாங்கன், பிரியங்கா, பவித்திரா, பிருந்தா, பைரவி, நர்த்தனன், ஜனதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பேரன் பேத்திகளைக் காக்க வந்த பேரனவர் தமிழ் காக்கும் கடமையையும் புலத்தினிலே ஆற்றிவந்தார்! தமிழ்ப் பணியால் தமிழரெல்லாம் ஆழமாக அன்பு செய்த ஆசானே இறையிடியில் இளைப்பாறி ஆத்ம ஈடேற்றம் அடைந்திடவே ஆத்ம...