கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த சீனிவாசன் தமிழர் போராட்டத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். 1977 ஆம் ஆண்டு தமிழர் விரோதப் படுகொலைக்குப் பிறகு, அவர் தனது நேரத்தையும், வளங்களையும் மக்களின் நலனுக்காக தியாகம் செய்யதவர். ஒரு தீவிர ஆர்வலர். அரசியல் பிளவுகளுக்கு அப்பால் நண்பர்களை உருவாக்கினார். மற்றவர்கள் செய்யத் துணியாத கடினமான பணிகளைச் செய்ய அவர் தனது வாழ்கையும், உயிரையும் பணயம் வைத்தார். அவர் வீரம் கொண்டவர். இருந்தும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண விரும்பினார். தமிழர் விடுதலை இயக்கம்(UK), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகியவற்றில் பணியாற்றிய போதும், தமிழர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது. அவரது மனைவி சந்திராதேவி இடைவிடாமல் அசைக்க முடியாத ஆதரவை வழங்கினார். அவர் வீட்டு பொறுப்புகளை கவனித்துக் கொள்ள கடினமாக உழைத்தார். அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் அர்ப்பணிப்பிற்காகவும், இழப்புக்காகவும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். நல்லெண்ண முயற்சிகளை மீண்டும் நினைவினில் மீட்டு விடைபெறுகிறேன்.