3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கணபதிப்பிள்ளை சிவறஞ்சன்
(றஞ்சன்)
வயது 36
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சிவறஞ்சன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று நீங்கள் மறைந்து
ஆன போதும் அணையாது
உன் நினைவு எம் நெஞ்சில்..
வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் இழப்பால்
எனினும் பேதை மனம் நீ வாழ்ந்த உலகம்
இன்று உனக்காக தவிக்கிறது.
என்றும் உன் நினைவுகளுடன்
வாழும் அம்மா, அப்பா, உடன் பிறப்புக்கள்
மற்றும் உற்றார், உறவினர்கள்
உன் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
தகவல்:
குடும்பத்தினர்