1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை செல்லையா
வயது 92
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:05/10/2025
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை செல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எங்கள் அன்புத் தெய்வம்
ஐயா நீங்கள்...!
ஓர் ஆண்டு கடுகதியில் கரைந்தோடிச் சென்றாலும்
உங்கள் நினைவுகள் கல்மேல் பொறித்த
எழுத்துக்கள் போல் எங்களை விட்டு அகலவில்லை.
உழைப்பை உயர்வாய் மதித்தவர் நீங்களே
உறவுகளை அன்போடு அணைத்தவர் நீங்களே
உங்களின் வழித்தடத்தை பின்பற்றி
நன்மக்களாய் நாம் மிளிர்வோம்
இதுவே உங்களுக்கு நாம் தரும் உறுதி
அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு
பிறப்பிலும் எமக்கே அப்பாவாய்
பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.