எங்கள் அன்பு மாமி உங்கள் இழப்பில் துயர்கொண்டு இருக்கிறோம். உங்களை இங்கிருந்து கடைசியில் மரியாதை செய்கிறோம். உங்கள் அன்பும் நேரிய குணங்களும் என்னை போலவே உலகத்தார் யாவராலும் நினைக்க படும். எங்கள் அன்பு பெரியமாமாவின் பெருமையான எங்கள் மாமி. உங்களை நினைத்து என்னை அறியாமல் கண்ணீர் பெருகிறது. பெருமைகள் அத்தனையும் கொண்டு வாழ்ந்தீர் கள். அன்பான அறிவான அரிதான மச்சான் மச்சாள் மாரை நமக்கு அளித் தீர் கள். பணம் புகழ் இவற்றுக்கு மயங்காத இதயம் உங்களது அறிவேன். வாழ்வில் ஆசிரியராய் எல்லோருக்கும் எப்பவும் இருந்தீர்கள். பொறுமையின் குன்றாக உங்களை நான் கண்டு இருக்கிறேன். பூக்கள் தூவி என் மனதால் உங்களை தழுவி விடை பெறுகிறேன். என் அம்மாவின் பேரன்பு க்குரிய மச்சா ள் நீங்கள். எங்கள் குடும்பத்தினர் யாவரும் உங்களை வணங்குகிறோம். போய் வாருங்கள் எங்கள் அன்பு பெரிய மாமி! :(