29ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுவில் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சரஸ்வதி அவர்களின் 29ம் ஆண்டு நினைவஞ்சலி.
29 ஆண்டு காலம் இமைப்பொழுதில்
போனதம்மா
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லை
அம்மா இவ்வுலகில்!
அம்மா எங்கள் உயிருடன்
கலந்திட்ட உங்கள் உதிரம்
எம் உடலில்
உள்ளவரை நீங்கள்
எம் ஒவ்வொருவரின்
உயிருக்குள் உயிராக வாழ்வீர்கள்
எம்முடன் நாம் இவ்வுலகில் உள்ளவரை!
மறுபிறவி என இருந்தால்
மீண்டும் நாம்
உங்கள்
கருவறையில் புதிதாக உருவெடுத்து
உங்கள் மடியில் நாம்
தவழ வேண்டும் அம்மா!
தகவல்:
குடும்பத்தினர்