யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி மானிப்பாயை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பீதாம்பரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:07/05/2023.
குல தீபமே!
எங்கள் குடும்பத்திற்கு ஒளி ஏற்றிய
குன்றினில் ஏற்றிய தீபமே!
எமக்குக் கூறாமல் எமைவிட்டு
மறைந்ததேனோ...!
ஆண்டொன்று சென்றாலும்
ஆறிடுமோ எம்துயரம்
வருடமொன்று கடந்தாலும்
மாறிடுமோ உங்கள் நினைவு
கடந்துவிட்ட ஒருவருடத்தில்
கலங்காத நாட்களில்லை
நீங்கள் இருக்கும் போது
ஆனந்தக் கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து
கண்ணீர் வடிக்குதையா
எல்லா விதத்திலும் உறுதுணையாய்
இருந்து வழி நடத்தினீர்கள் இப்போது
நீங்கள் இல்லாமல் என்ன செய்வது
என்று தெரியாமல் பரிதவிக்கிறேன்
உங்களையே என் வாழ்க்கையாக
நேசித்த எனக்கு இப்போது வாழ்க்கையே
வெறித்தோடி விட்டது நீங்கள் இல்லாமல்
உங்களை பற்றி எழுதுவதென்றால்
இன்னும் ஆயிரம் பக்கம் எழுதலாம்
உங்களின் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்...!
It’s terrible to hear about your loss and I express my sincere sympathy to you and your family