Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 01 SEP 1940
விண்ணில் 28 AUG 2024
அமரர் கணபதிப்பிள்ளை பத்மநாதன்
முன்னாள் தொழிலதிபர்
வயது 83
அமரர் கணபதிப்பிள்ளை பத்மநாதன் 1940 - 2024 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்கண்டு, தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஞானசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற றஜீவன், லவக்குமரன்(லண்டன்), தனஞ்ஜெயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரசாந்தி(லண்டன்), விஜயதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யாதவன், டிக்‌ஷிதா(லண்டன்), அனன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தவயோகசிந்தாமணி, பஞ்சலிங்கம், சுந்தரலிங்கம், இராசலிங்கம் மற்றும் சொர்ணலிங்கம்(லண்டன்), விக்கினேஸ்வரி, சண்முகலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணாநந்தா, முருகேசுப்பிள்ளை, ஞானேஸ்வரதேவி மற்றும் Dr. தியாகராஜா(லண்டன்), மீனாம்பிகை(ஜேர்மனி), விஜயா(லண்டன்), இந்திரலேகா(ஜேர்மனி), பராசக்தி, அருளானந்தம், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி
C.C.T.M.S பாடசாலை ஒழுங்கை,
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விக்கினேஸ்வரி - சகோதரி
தனஞ்ஜெயன் - மகன்
லவன் - மகன்