70வது பிறந்தநாளும், 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்
யாழ். துன்னாலை வடக்கு சோழியவத்தையைப் பிறப்பிடமாகவும், கலிகை சந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை கிருஷ்ணபவான் அவர்களின் 70வது பிறந்தநாளும், 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்.
அன்னார், வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நவநீதன்(பிரபு), சூரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வனிதா அவர்களின் அன்பு மாமனாரும்,
இராசாத்தி, அருந்தவராஜா, அருள்ராஜா(பாரி), அன்னலக்சுமி, நந்தகோபால், கிருஷ்ணகோபால் இராஜகோபால், பிரபாவதி, சேதிலக்சுமி, ஜெயலக்சுமி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்
அன்பு அப்பாவே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு ஐந்தாகி விட்டது
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்றழைக்க
நீங்கள் இப்பூவுலகில் இல்லை
ஆலமரமாய் நின்று
எம்மை அரவணைத்தீர்கள்
கல்விச் செல்வத்தால்
எம்மை நாடறிய வைத்தீர்கள்
குடும்பத் தலைவராயும்
கடமையில் ஆசானாகவும்
இவ்வுலகில் மிளிர்ந்தீர்கள்
உங்கள் புன்சிரிப்பு நிதம்
எமை வாட்டுகின்றது அப்பா
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆன்மாவின் சாந்திக்கு
எல்லாம்
வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details