
யாழ். வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய் தந்தைக்கு அன்பான பிள்ளையாய்
தாரத்திற்கு தக்க துணைவனாய்
தன்நலம் கருதா பண்பாளனாய் வாழ்ந்திருந்தாய்
ஆலமரம் போல அனைவருக்கும் நிழல் தந்தாய்
நாலும் தெரிந்தவனாய் நல்மனிதனாய் வாழ்ந்திருந்தாய்
காலமெல்லாம் எமைக்காத்து களித்திருப்பாய் என்றிருக்க
கண்ணிமைக்கும் நேரமதில் காற்றோடு காற்றானாய்
எம்முயிரை உன்னில் தொலைத்துவிட்டு
உன் இதயம் சுமந்து நடக்கின்றோம் கண்ணீரோடு
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டானாலும்
எம் மனதை விட்டு அழியாது உன் நினைவும் நின்முகமும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
அன்னாரின் முதலாம் ஆண்டு திவசக்கிரியைகள் 08-07-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் அவரது ஆத்மா சாந்திக்கான பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.