

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 07-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னாச்சி(தங்கமுத்து) தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், மதியாபரணம் தம்பதிகளின் அருமை மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியா, காவியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாராதேவி(இலங்கை), குலதேவி(பிரான்ஸ்), கவிதா(லண்டன்) ஆகியோரின் அருமை சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தையா, அன்ரன்(பிரான்ஸ்), கமலன்(லண்டன்), நவரட்ணம்- மதிவதனி(நோர்வே), காலஞ்சென்ற ஜெயச்சந்திரன் -இந்திராணி, ஜெபநேசன் -சுதர்சினி(பின்லாந்து), ஜெயலிங்கம்- சயிலகா(பின்லாந்து), ஜெயக்குமார்(கனடா), ஜெயமூர்த்தி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
சசிகுமார்- சாருலதா, ரவிந்திரன் -சுபாஜினி, நிருபன் -ஜாமினி, அனிக்கா, அரண்யா, மக்மிலன், றொஷானா, றொஷானி, ஆதித்தன், அக்ஷயா, துஷ்யந்தன், கபிலன், சந்தோஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.