யாழ். கந்தரோடை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stockach ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.
ஓர் திங்கள் ஆனதுவோ... கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!
31 நாள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும் அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது
உங்கள் பிரிவால்
வாடும்
குடும்பத்தினர்..!!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 05-11-2022 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Address:
Radlerhalle(Kunstrad)
Weinbergweg 23
78359 Orsingen-Nenzingen