Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 SEP 1978
இறப்பு 12 JAN 2020
அமரர் கனகசபை ஆனந்தசுதன் (சுதன்)
வயது 41
அமரர் கனகசபை ஆனந்தசுதன் 1978 - 2020 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Tooting, கனடா Brampton, Toronto, Alberta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசபை ஆனந்தசுதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மனைவி....

கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?

என்னையும், உஙகள் மூன்று பிள்ளைகளையும்
தவியாய் தவிக்கவிட்டு - 41 வயதினிலே
தனியாக நீங்கள் பிரிந்து போனீங்கள்!
மனம் வந்து போனீங்களா? - நான்
தாங்குவேன் என்று தப்புக்கணக்கு போட்டீர்களா?

என் அன்புத் தெய்வமே!
இங்கே - நான் படும் பாட்டை...
உங்களிடம் மட்டுமே சொல்லியழ முடியுமையா!

பக்குவமாக நாம் வாழ்ந்து வந்தோமே! - கண்
பட்டது போல் நீங்கள் போய் விட்டீகள்!
பட்டுப் போனது எங்கள் வாழ்க்கை மட்டும் தானே!

பிள்ளைகளின் நினைவலைகள்....

அப்பா அப்பா அப்பா என்று உங்களை
கூப்பிட நீங்கள் இல்லையப்பா
எப்படி நீங்கள் எங்களை விட்டு
போய் வீட்டீர்கள் அப்பா நீங்கள்
சொன்ன மாதிரி 40 வயதில்
எங்களை தனியாக விட்டு போய்வீட்டீர்கள்

மாம்பு என்று என்னை
யாரும் கூப்பிட கூட யாரும் இல்லை
அப்பா, நான் என்றும் உங்கள்
வார்த்தைகளை மறக்கமாட்டேன் அப்பா,
எனது 10வது பிறந்தநாளை
கொண்டாடுவோம் என்று என் மனதில்
பதிய வைத்து கடைசியில் நீங்கள் இல்லை அப்பா 

அப்பா நான் தான் அகி
நீங்கள் என்  Laptop வுடன் 13-01-2020
நான் உங்களை Airport ல் பார்பேன் என்று
அம்மாவுடன் இருந்தேன் திடீர் என்று
அம்மா நாங்கள் Toronto போறோம்
அப்பா Hospital ல் என்றவுடல் நான்
நினைத்தேன் நீங்கள் Accident ஆகிவிட்டீர்
என்று நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லையப்பா

அப்பா நான் உங்களை அந்த
கோலத்துடன் பார்தவுடன் என்னால்
என்ன செய்வது என்று புரியாமல்
யோசித்துக் கொள்ளும் நேரத்தில்

அப்பா இன்று நாங்கள் தனி பிள்ளைகளால் வாழும்
நிலையில் வந்து விட்டோம் அப்பா. ஆனால்
அப்பா நீங்கள் இந்த covid-19 தப்பிவீட்டீர்கள் .

அப்பா என்றும் உங்கள் நினைவில் வாழும் நாங்கள்
நீங்களும் எங்களுடன் என்றும் இருப்பீர்கள்
அப்பா தினமும் உங்களை நாங்கள்
பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.

அப்பா நீங்கள் எப்படி எங்களை விட்டு
சென்றீர்கள் எனக்கு இன்னும் இதற்கு
பதில் தெரியவில்லை ஆனால் நீங்கள்
சொன்ன வார்த்தை 40 வயதுதில் நான்
பிரிந்துவிடுவேன் என்றும் இது, தான் என்
கடைசி வாகனம்(Truck) என்பதை
நான் நினைத்து பார்பேன், 
அது உண்மை
என்றதை உறுதிபடுத்திள்ளீர்கள் அப்பா
அதை நாங்கள் தான் நம்பவில்லை
இனி என்ன தான் இருக்கு அப்பா
ஒன்றும் இல்லை இல்லை இல்லை
அப்பா என்று நாங்கள் என்றும்
உங்கள் நினைவில் இருப்போம்
அப்பாவின் அகி, அஜி, அறிஸ்  

தகவல்: மனைவி, பிள்ளைகள்