Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 DEC 1937
இறப்பு 01 FEB 2020
அமரர் கனகம்மா குழந்தைவேலு
வயது 82
அமரர் கனகம்மா குழந்தைவேலு 1937 - 2020 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சாவகச்சேரி கண்டுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா குழந்தைவேலு அவர்கள் 01-02-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார். காலஞ்சென்றவர்களான கந்தையா திரவியம் தம்பதிகளின் அன்பு மகளும், மாரிமுத்து அன்னலட்சுமி ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற குழந்தைவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற குலேந்திரராஜன்(ராஜன் பொடிபில்டர்ஸ்) மற்றும் குணானந்தசீலன்(சீலன் பொடிபில்டர்ஸ்), காலஞ்சென்ற கலாநிதி மற்றும் கமலகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வீரபாகு அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், இரத்தினம், அன்னபூரணம், இராசம்மா, சுப்ரமணியம், ராஜலக்ஷ்மி, செல்வராணி, பூரணம் மற்றும் லட்சுமி ஆகியோரின் ஆசை மைத்துனியும்,

வேதநாயகி, சகுந்தலாதேவி, ஜெயராமநாதன்(ரவி), திருச்செல்வம்(ஸ்ரீ மீனாட்சிஅம்மன் மரக்காலை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

கிஷோர்குமார், ஷோபிகா, நிலக்சன், கோபிகா, தீபிகன் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,

காலஞ்சென்ற கஜேந்தினி(கீதா) மற்றும் சங்கர்லால், மதன்லால், பிறேம்லால், ரஜீவ்லால், கஜலக்சி, கிருஷாந்த், நவலாஜினி, டினோஜன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

தர்ஷிகா, கார்த்திகா, ஜெயபிரபா, நிஷாலினி, சங்கீதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லிஜாஸ்வி, அட்சயா, ஆதவி, இனியன், சாக்சி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 29 Feb, 2020