யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசூரியர் நாகேஸ்வரி அவர்கள் 21-06-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற அருணாச்சலம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசூரியர் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரவீந்திரன்(பிரான்ஸ்), ரஞ்சினி, ராகினி, குலேந்திரன்(ஜேர்மனி), புவீந்திரன்(ஜேர்மனி), ரஜனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, பாலசிங்கம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலேந்திரா, மகேஸ்வரி(மஞ்சு), சண்முகலிங்கம், பிரேமகாந்தி, நந்தினி, மோகனராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீபன், பிரியதர்சினி, பிரகாஸ், பிரசாந்தன், வினோதன், நிலோசன், டிலக்ஷினி, மதுமிதன், அனுநிதன், லதாங்கி, நீரஜன், நிருஸன், நிவேதா, மிதுலன், மிதுர்னா, மிதுஷன், மீரன், அபிஷயா, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கேஷிகா, ஹாசினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details