யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அம்பாறை, மட்டக்களப்பு, கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி சுப்பிரமணியம் அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சுந்தரம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுகந்தி, பகீரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஷோக், பூர்னிமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஈஸ்வரி, வடிவாம்பிகை, காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகம்மா, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, திருஞானசம்பந்தர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனகன், மதுரா, சமித்தா, சம்பூர்ணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Joining the family in their prayers