Clicky

பிறப்பு 05 AUG 1952
இறப்பு 14 DEC 2021
பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன்
ஓய்வு நிலை பேராசிரியர்- இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம், மரபுவழி அறங்காவலர்- நயினை ஸ்ரீ நாகபூசணி கோவில், முன்னாள் இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சி தயாரிப்பாளர்
வயது 69
பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் 1952 - 2021 நயினாதீவு 1ம் வட்டாரம்,, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
05 AUG, 1952
Death
14 DEC, 2021
Professor Kanagasabapathy Nageswaran
திரு.கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் யாழ் இந்துக் கல்லூரியின் மைந்தன்.1966 இல் நான் யாழ் இந்தக் கல்லூரியில் கல்வி கற்கத் தொடங்கிய காலத்தில் அவரை நன்கு அறிவேன் என்று சொல்லுவதை விட அவர் அக்காலகட்ட்த்தில் கல்லூரியில் எல்லோருக்கும் தெரிந்தவர் என்று சொல்வது மிகச் சாலப் பொருந்தும். அதற்கு எடுத்துக்காட்டு கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில் இவர் ஆற்றிய சமய சொற்பொழிவுகள்.விளையும் பயிரை முளையிலே தெரியும் என்ற முதுமொழியின்படி இவர் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்துப் பேராசிரியராக இருந்து தாய்மொழியாம் தமிழுக்குத் தொண்டாற்றியதுடன் மட்டுமல்லாது நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் மரபுவழி அறங்காவலர் தொண்டுகளையும் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பொறுப்பு வேலைகளையும் செய்துவந்தார். அவரின் குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி!!!
Write Tribute